’விஜய் தேவரக்கொண்டா படத்துக்கு 'திமிரு' ஈஷ்வரி வந்தே ஆக வேண்டும்’ – ரீசன் இது தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

World Famous Lover படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் ஐஷ்வர்யா ராஜேஷ், ரஷி கன்னா, கேத்ரீன் த்ரீசா, இசபில் லெத் ஆகியோர் நடித்துள்ளனர்.  4 காதல் ஜோடிகளுக்கிடையில் நிகழும் இந்த anthology ரக திரைப்படம் 4 வேறுபட்ட காதல் கதைகளை கூறவுள்ளது.  இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு தெலுங்கு தமிழ் ஆகிய இரு மொழிகளில் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

Vijay Devarakonda Sriya Reddy Aishwarya Rajesh on Instagram comment World Famous Lover

இந்த படத்துக்காக ஒரு ப்ரோமோ வீடியோவை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தன் இன்ஸ்டாக்ராம் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நிச்சயம் தான் இந்த படத்தை பார்க்கப் போவதாக தெரிவித்தார். இதற்கு பதில் கொடுத்த ஐஷ்வர்யா ராஜேஷ் ‘நீ எப்படியிருந்தாலும் என் படத்த பாத்து தான் ஆகணும்’ என்று நட்புக்கே உரிய அணுக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டி தமிழில் சாமுராய் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் விஷாலின் ’திமிரு’ படத்தில் அவர் நடித்த ஈஷ்வரி ரோல் வெகுவான பாராட்டுகளை பெற்றது. மேலும் அவர் காஞ்சிவரம், பள்ளிக்கூடம் ஆகிய படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Entertainment sub editor