குழந்தைக்கு இப்படியும் சாப்பாடு ஊட்டலாமா..? சமீரா ரெட்டி சொல்லும் சூப்பர் ட்ரிக்ஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்குழந்தைக்கு பிரச்சனையின்றி சாப்பாடு ஊட்ட, நடிகை சமீரா ரெட்டி ஒரு ட்ரிக்ஸ் சொல்கிறார்.

சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தனது இயல்பான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து அஜித் ஜோடியாக அசல் படத்தில் நடித்தார். மேலும் வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து 2014-ல் திருமணம் செய்து கொண்ட இவர், சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தனது குழந்தைக்கு உணவு ஊட்டும் வீடியோவை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த தனது பதிவில், 'நைராவுக்கு உணவு ஊட்டுவது, விரல்களை முதலில் எடுத்து விளையாடும் விளையாட்டை போன்றது என்று கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், மேலும் தனது குழந்தைக்கு அளிக்கும் உணவு முறைகளை பற்றியும் எழுதியுள்ளார். முடிவில், குழந்தைகளுக்கு உணவளிக்க மிகப்பெரிய டிப்ஸ் ஒன்றை சேர்த்துள்ள அவர், 'என் குழந்தைக்கு உணவளிக்கும் போது ஒரே பாடலை ப்ளே செய்வேன். அதன் மூலம் குழந்தைக்கு சவுகர்யமாகவும், பாடலை கேட்கும் போது சாப்பிடும் நேரம் வந்துவிட்டது என்ற உணர்வும் வந்துவிடும்' என அவர் பதிவிட்டுள்ளார்.