அனுபமா வெளியிட்ட ரொமான்டிக் ஃபோட்டோ - ''நீயும் நானும் இந்த அழகான உலகத்தில்... Couple Goals''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிரேமம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்துக்கு தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  அந்த படத்தில் மேரி ஜார்ஜாக நிவின் பாலியை மட்டுமல்லாமல் கியூட்டான ரியாக்சன், அழகான சிரிப்பால் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

Anupama Parameswaran Shared a photo on her instagram about Couple Goals

தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் வெகுவாக பரீட்சையமாகியுள்ளார். மலையாளம் போலவே தெலுங்கு 'பிரேமம்' படத்திலும் அதே வேடத்தில் நடித்திருந்தார். இதனால் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அவர், தெலுங்கில் சதமனம் பவதி, கிருஷ்ணர்ஜூனா யுத்தம், தேஜ் ஐ லவ்யூ, ராக்சசுடு என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். தற்போது 'மணியரயிலே அசோகன்' (Maniyarayile Ashokan) என்ற மலையாள படத்தில் நடித்து வரும் அவர்  அந்த படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''கடற்கரையில் சற்று வயதான ஜோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ''நீயும் நானும் இந்த அழகான உலகத்தில்... Couple Goals'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You and I in this beautiful world ♥️🏝 #couplegoals 💎

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

Entertainment sub editor