“உன் கூடவே பொறக்கணும்..!” - விஜய் டிவி ‘மைனா’ நந்தினியின் Emotional வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 29, 2019 05:56 PM
விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனாவாக நடித்து புகழ்பெற்ற நந்தினிக்கும் 'நாயகி', 'சத்யா' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த யோகேஷ்வரன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மணக்கோளத்தில் அவரது தம்பியுடன் 'வேலாயுதம்' பாடலான ரத்தத்தின் ரத்தமே மற்றும் 'நம்ம வீட்டுப்பிள்ளை' பட பாடலான உன் கூடவே பொறக்கணும் பாடல்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு நடனமாடுகிறார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு. என் தம்பி எனது உயிர். இந்த மாதிரி ஒரு தம்பி கிடைத்ததற்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள். இந்த மாதிரி ஒரு தம்பி கிடச்சதுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன் கூடவே தான் பொறக்கணும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.