தனது மகளின் பிறந்தநாள் ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை அசின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 30, 2019 06:29 PM
'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன் என தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அதன் மூலம் ரசிகர்களின் பெரிதும் கவர்ந்தார்.

மேலும் 'கஜினி' திரைப்படம் மூலம் ஹிந்தியிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். இதனைத் தொடர்ந்து மைக்ரோ மேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு அரின் என்ற பெயரில் 2 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் தனது மகளின் 2வது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படத்தை நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.