''நமக்கு எதுக்கு ஜி இந்த விளம்பரம்லாம்'' - சாண்டியை கலாய்த்த கவின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 01, 2019 03:27 PM
தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சி கவின் - சாண்டி காம்போவின் செயல்பாடுகள் ரசிகர்களை பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கவினும் சாண்டியும் நல்ல நண்பர்கள். தற்போது வெளியில் இருவரும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சாண்டி கவினுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த ஜனவரி 2016 ஆம் ஆண்டு என்னுடைய முதல் டான்ஸ் ஸ்டுடியோவின் திறப்பு விழாவில் கவின் தம்பியுடன். சில உறவுகள் எப்பொழுதும் மாறாது என்பது போல் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதிலளித்த கவின், நமக்கு எதுக்கு ஜி இந்த விளம்பரம்லா அப்டியே போவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.