பிரபல சீரியல் நடிகருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 01, 2019 10:06 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்த தொடரில் நடித்த நடிகர்களை, அவர்கள் நடித்த கேரக்டரின் பெயராலேயே அழைத்து வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக அந்த தொடரில் மைனா என்ற வேடத்தில் நடித்தவர் நந்தினி. இவர் ரசிகர்களால் மைனா என்றே அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தனது காமெடியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் யோகேஷ்வரன் என்பவருடன் திருமணம் நிச்சயமானதாக குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். யோகேஸ்வரன் நாயகி, சத்யா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Myna Nandhini, Saravanan Meenatchi, Yogeshwaran