சார், மாளவிகா சார் ! - சூட்டிங்கிற்கு முன் செல்ஃபியை பகிர்ந்த 'தளபதி 64' ஹீரோயின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 15, 2019 04:49 PM
'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தளபதி 64 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம், சேத்தன், அழகம் பெருமாள், சுனில் ரெட்டி, கௌரி கிஷண் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் ஷூட்டிங்கிற்கு முன் தனது செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.