'நீ என்ன நினச்சாலும் கவலையில்ல' - இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்த பிக்பாஸ் அபிராமி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 08, 2019 02:41 PM
நடிகை அபிராமி தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அபிராமியின் நடிப்பு விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றது. மேலும், அபிராமி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். .

இவர் தனது அடுத்த படம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். கஜன் எனப் பெயரிட்டுள்ள இந்த படத்தை வீடு புரொடக்ஷன் மற்றும் அழகப்பா கரி கிங் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மலேசியா நாட்டுப் படமான இதனை எஸ்.மதன் இயக்குகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கான பதிவில், நீ என்ன நினச்சாலும், கவலையில்ல. நான் பிறந்த மண்ணையும் ஆண்டவன் இருக்கும் விண்ணையும் மட்டுமே நம்பி வாழும் நான் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Abhirami Venkatachalam, Bigg Boss 3, Instagram