"ஜோக்கரா இவன்..?" - ஹேட்டர்ஸ்க்கு அட்டகாசமான பதிலடி கொடுத்த ரன்வீர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் லைவ் வீடியோவில் தன்னை வம்புக்கு இழுத்த ஹேட்டர்ஸ்க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Ranveer Singh's befiting reply to Trolls and Haters in Instagram Live chat video

பாலிவுட்டில் இறுதியாக ‘கல்லி பாய்’ திரைப்படத்தில் ரேப் பாடகராக நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகர் ரன்வீர் சிங், தற்போது கபீர் கான் இயக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘83’ படத்தில் நடித்துள்ளார்.

கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக அவரது மனைவி தீபிகா படுகோன் நடித்துள்ளார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவில் ரசிகர்களிடம் நடிகர் ரன்வீர் சிங் உரையாடினார். அப்போது, “அட இந்த சத்தத்த நிறுத்து, ஹிந்தி தெரியாதா என்ன..? யார்ரா இவன் ஜோக்கர் மாதிரி இருக்கான்..” என ஹேட்டர்ஸ் கமெண்ட் செய்துள்ளனர்.

இதனை பார்த்த ரன்வீர் சிங் மிகவும் கூலாக அதற்கு பதில் கொடுத்தார். ரன்வீர் கூறுகையில், “உங்களுக்கு வேற வேலைவெட்டி இல்லையா..? போய் உருப்படியா ஏதானும் பண்ணுங்க..? ஏன் என் வாழ்க்கைல குறுக்க வரீங்க..” என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவில் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடிப்பதையும் ரன்வீர் சிங் பாராட்டினார். சமீபத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிப்பதற்காக ரன்வீர் சிங் ஹைதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது.