'எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க' - ரசிகர்களுக்கு கவின் வேண்டுகோள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 14, 2019 01:19 PM
'சரவணன் மீனாட்சி' சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர் கவின். பின்பு 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்தில் படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் கடந்த மே மாதம் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸில் அரவது நடவடிக்கைகளால் வெகுவான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து கவினின் அடுத்த திட்டங்கள் குறித்து அறிந்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கவின் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பேசிக்கா நான் நல்ல பையன்.. கொஞ்சம் தா... என்ன மாதிரி இல்லாம எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க. குழந்தைகள் தின வாழ்த்துகள்'' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.