விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றது. தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் சென்றுள்ளார் மற்ற நடிகர்களின் படங்களில் அழுத்தமான வேடங்கள் கிடைத்தாலும் அதையும் ஏற்று நடித்து வருகிறார். இது அவருக்கு பெரும் பலமாய் அமைந்துள்ளது.
விரைவில் சிந்துபாது, மாமனிதன் என சில படங்கள் ரிலிஸிற்கு காத்திருக்கின்றது அதே வேளையில் டிவி நிகழ்ச்சியிலும் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகிவிட்டார்.
அந்த வகையில் அவர் அடுத்ததாக இயக்குனர் விஜய் சந்தரின் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் இவர் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும், சங்கத்தமிழன் மாஸ் கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகின்றது.