வடசென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை தொடங்கிய தனுஷ், ‘அசுர வேட்டை விரைவில்..’ என்ற போஸ்டரை ஒன்றை பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகி வரும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் அசுரத்தனமான நடிப்பை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த படத்தை தவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ்-சினேகா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். அது தவிர ‘வடசென்னை 2’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய திரைப்படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன.