தங்க மங்கை கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Makkal Selvan Vijay Sethupathi gave Rs.5 Lakhs to Gold Medal winner Gomathi Marimuthu

சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்.

இந்தியாவின் புதிய நட்சத்திரமாக மாறியுள்ள கோமதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவியும், அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோமதி வசிக்கும் திருச்சியை சேர்ந்த முடிகண்டம்யில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்ற செயலாளர் குமரன், மற்றும்  சில முக்கிய மாவட்ட தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்.

தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பணிகள் ராஜபாளையத்தில் நடைபெற்று வருகிறது.