மக்கள் செல்வனை சந்தித்த சிம்பு தம்பி குரளரசன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குரளரசன் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

Simbu's brother Kuralarasan invites Makkal Selvan Vijay Sethupathi for his Wedding reception

சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான குரளரசனுக்கு கடந்த ஏப்.26ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அதைத் தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் குரளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்காக பிரபலங்களை சந்தித்து சிம்பு குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியை குரளரசன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘சிந்துபாத்’, ‘சங்கத்தமிழன்’, ‘மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களும், புதிதாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ திரைப்படமும் விஜய் சேதுபதி கைவசம் உள்ளன.