மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் காமெடி காம்போ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இயற்கை', 'ஈ',' பேராண்மை;, 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் விஜய்சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்கும் படம் 'லாபம்;. இந்த படத்தை விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன் மற்றும் 7சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

Danny to Act in Vijay Sethupathi and Shruti Haasan's Laabam

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.  ராம்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  நடிகர் ஜெகபதி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் விஜய் சேதுபதியின் சொந்த ஊரான ராஜபாளையத்தில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிக்பாஸ் புகழ் டேனி இணைந்துள்ளார். விஜய் சேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் டேனி பேசிய, '' ஃபிரெண்டு ஃபீல் ஆய்டாப்புல...'' என்ற வசனம் மிகவும் பிரபலமடைந்தது.