ஜெயம் ரவியுடன் ராஷி கண்ணா இணைந்து நடித்த 'அடங்க மறு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராஷி கண்ணா தற்போது விஷாலுடன் 'அயோக்யா' என்கிற படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து Behindwoods Tvயின் கிஸ் மீ , ஹக் மீ, ஸ்லாப் மீ என்ற கேம் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தொகுப்பாளரின் கேள்விக்கு ராஷி கண்ணா சரியாக பதிலளித்தால் தொகுப்பாளருக்கு ஏதாவது ஒரு தண்டனையை அவர் கொடுக்கலாம்.
அப்படி ஒரு கேள்விக்கு அவர் சரியாக பதிலளிக்க, தொகுப்பாளருக்கு தண்டனை என்று முடிவானது. அதனைத் தொடர்ந்து தொகுப்பாளர் நிக்கியை, தன்னிடம் தெலுங்கில் புரொபோஸ் செய்யுமாறு கூறினார். அப்போது நிக்கி தெலுங்கில், ஓழு குண்டலவாடா என தப்பு தப்பாக புரொபோஸ் செய்யும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி.
''ஏது ஏழுகுண்டல வாடாவா ?'' - தெலுங்கில் கலகல புரொபோஸ் சீன் வீடியோ