பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ன் முதல் போட்டியாளர் இந்த நடிகையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 3-யின் போட்டியாளாரக பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவல் பற்றி சாந்தினி நம்மிடையே பிரத்யேகமாக விளக்கமளித்துள்ளார்.

Actress Chandini Tamizharasan to contest in Bigg Boss Tamil Season 3 host by Kamal Haasan

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 1, சீசன் 2 என ஒளிபரப்பான இரண்டு நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இந்நிலையில், இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் புரொமோக்கான ஷூட்டிங் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில், பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் போட்டியாளராக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மன்னர் வகையறா, வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி, ராஜாரங்கூஸ்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சாந்தினி சமீபத்தில் நந்தா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இது குறித்து நாம் அவரை தொடர்புக் கொண்டபோது, ‘பிக் பாஸ் 3-ல் பங்கேற்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது அய்லா என்ற ஹாரர் படத்தில் நடித்து வரும் சாந்தினி, அடுத்தடுத்து 4,5 திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.