விஜய் சேதுபதி நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் 'சிந்துபாத்', 'மாமனிதன்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
    விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில் 'சேரா நரசிம்ம ரெட்டி', மலையாளத்தில் 'மார்கோனி மத்தை' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இதில் 'சேரா நரசிம்ம ரெட்டி' படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரரும், சிரஞ்சீவியின் உறவினரும் ஆவார். இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க புச்சி பாபு இயக்குகிறார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
