Maha others
Nadhi others
www.garudabazaar.com

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள மலையாள படம்.. ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான டிரைலர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆண்டில், இதுவரை 'கடைசி விவசாயி', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்', 'மாமனிதன்' உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ளது.

vijay sethupathi and nithya menen 19 1 a release update

இதனைத் தொடர்ந்து, Merry Christmas, 19(1)(a), விடுதலை என ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதில், அவர் மலையாளத்தில் நடித்துள்ள 19(1)(a) திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான மார்க்கோனி மத்தாய் என்னும் திரைப்படத்தில், ஜெயராமுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது 19(1)(a) என்னும் மலையாள திரைப்படத்தில் விஐய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில், அவருடன் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பில் உள்ள 19(1)(a) என்கிற பிரிவு, இந்த படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தில் கருத்து சுதந்திரம் பற்றிய கதையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay sethupathi and nithya menen 19 1 a release update

இந்து VS எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தினை ஆன்டோ ஜோசப் மற்றும் நீதா பின்டோ ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

vijay sethupathi and nithya menen 19 1 a release update

இந்நிலையில், 19(1)(a) படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி ஒரு எழுத்தாளர் போலவும், நடிகை  நித்யா மேனன் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருவது போன்றும் காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. அதே போல, இந்திரஜித் சுகுமாரன் மற்றும் இந்திரன்ஸ் ஆகியோருக்கும் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக தெரிகிறது. டிரைலர் பார்க்கும் ரசிகர்கள் பலரும், திரைப்படத்தின் ரிலீஸையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

தமிழைத் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, 19(1)(a)  என்னும் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

vijay sethupathi and nithya menen 19 1 a release update

19(1)(a) திரைப்படம், நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை 29 ஆம் தேதி வெளியாகும் என டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi and nithya menen 19 1 a release update

People looking for online information on 191a, Indhu VS, Indrajith Sukumaran, Nithya Menen, Vijay Sethupathi will find this news story useful.