www.garudabazaar.com

இரண்டு தேசிய விருதுகளை வென்ற சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மண்டேலா படம் வெளியானது.

SivaKarthikeyan Maaveeran Director Maddone Ashwin won 2 National Film Awards

Also Read | சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற 'பொம்மி' அபர்னா பாலமுரளி கிருஷ்ணன்!

விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தை  ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷ்பெர்ரி நிறுவனங்களுடன் இணைந்து Y Not ஸ்டுடியோஸ் சசி காந்த், இயக்குனர் பாலாஜி மோகன் விண்டோ நிறுவனம் இணைந்து தயாரித்து இருந்தன.

இந்த படத்தில் யோகிபாபு, ஷீலா உடன் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு விது ஐயண்ணா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பிலோமின் ராஜ் கையாண்டார். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்தார்.

SivaKarthikeyan Maaveeran Director Maddone Ashwin won 2 National Film Awards

இந்நிலையில், டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த அறிமுக இயக்குனர் & சிறந்த வசனகர்த்தா ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார். இதனை மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.

SivaKarthikeyan Maaveeran Director Maddone Ashwin won 2 National Film Awards

சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.

SivaKarthikeyan Maaveeran Director Maddone Ashwin won 2 National Film Awards

Also Read | 5 தேசிய விருதுகளை வென்று அசத்திய சூரரைப் போற்று.. இது வேற லெவல் சம்பவம்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Director Maddone Ashwin won 2 National Film Awards

People looking for online information on Director Maddone Ashwin, Director Maddone Ashwin won 2 National Film Awards, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran will find this news story useful.