Maha others
Nadhi others
www.garudabazaar.com

"எல்லாமே கடவுள் அருள்.." - The Gray Man ஹாலிவுட் படம் அமைந்தது பற்றி தனுஷ் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள "தி கிரே மேன்" ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

all gods grace says Dhanush The Gray Man exclusive

தமிழில் மக்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட், கோலிவுட் வரை சென்றுள்ளார். ஹாலிவுட்டில் அவர் நடித்துள்ள திரைப்படம் தான் 'தி கிரே மேன்'. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் படத்தின் பிரீமியர் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில், நடிகர் தனுஷ் வேட்டி கட்டிக்கொண்டு கலந்து கொண்டார். இன்று (22.07.2022) தி கிரே மேன் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'BehindwoodsTV' சேனலுக்கு இயக்குனர்கள் Joseph Russo, Anthony Russo மற்றும் தனுஷ் ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தனர்.

இதில் “இந்த திரைப்படம் அமைந்தது எப்படி..?” என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தனுஷ், “எல்லாமே அமைவது தான் ... நமக்கு எது எப்போது அமைகிறதோ அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தி நம்முடைய பெஸ்ட்டை எப்படி கொடுக்கிறோம் என்பதுதான்.  என்னைப் பொறுத்தவரை எனக்கு நானாக இது வேண்டும்.. அது வேண்டும் என எதையும் அமைத்துக் கொள்வதில்லை. எல்லாமே கடவுள் அருளால் தானாக அமைவது தான்..

அப்படி இது எனக்கு அமைந்தது. இதில் என்னால் முடிந்த வரை நான் முயற்சி பண்ணி இருக்கிறேன். இது என்னுடன் முடிவதில்லை. இந்திய அளவில் இருந்து திறமையுள்ள ஒருவனாக அங்கு செல்கிறோம் என்றால் நம்மை பார்த்து இன்னும் பல திறமை உள்ள இந்தியர்களை பற்றிய எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும் என்கிற பொறுப்பு, இருந்ததால் ஒரு மெனக்கடல் இருந்தது.

சண்டை பயிற்சியை பொருத்தவரை ஏற்கனவே நாம் பழகினது தான் என்றாலும் நிறையவே கற்றுக் கொள்வதற்கு புதிதாக இருந்தன. அந்த பயிற்சிகள் எல்லாமே சுவாரசியமாக அமைந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

"எல்லாமே கடவுள் அருள்.." - THE GRAY MAN ஹாலிவுட் படம் அமைந்தது பற்றி தனுஷ் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

all gods grace says Dhanush The Gray Man exclusive

People looking for online information on Anthony and Joe Russo, Dhanush, Netflix, The Gray Man will find this news story useful.