Pattamboochi

அடடே.. ‘மாமனிதன்’ படத்துல விஜய் சேதுபதியின் மகனா நடிச்சது இந்த இயக்குநரின் மகனா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று, தர்ம துரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Popular director son debut Vijay Sethupathi Maamanithan

Also Read | சிவகார்த்திகேயன் - பவர் ஸ்டார் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் ஃபோட்டோ!

வரவேற்பும், நன்மதிப்பும் பெற்ற இந்த படங்களின் வரிசையில் தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதிபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக மானஸ்வி நடித்துள்ளார். நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு மகளாவும், ‘வானத்தை போல’ முன்னாள் ஹீரோ தமன்குமார் நடித்த கண்மணி பாப்பா படத்தில் அவருக்கு மகளாகவும் நடித்து மானஸ்வி பிரபலமானவர். அண்மையில் சமுத்திரகனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடித்த சித்திரை செவ்வானம் படத்தில் சிறுவயது பூஜா கண்ணனாக நடித்திருந்தார் மானஸ்வி.

Popular director son debut Vijay Sethupathi Maamanithan

இவரை போலவே, மாமனிதன் படத்தில் விஜய் சேதிபதிக்கு மகனாக இயக்குநர் வ.கௌதமனின் மகன் தமிழ் நடித்திருக்கிறார். இயக்குநர் வ.கௌதமன் தமிழில் முரளி, சிம்ரன் நடித்த கனவே கலையாதே படத்தை இயக்கியவர்.

இதேபோல் சீமான், அஞ்சலி மற்றும் பலர் நடித்த மகிழ்ச்சி திரைப்படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்தார். முன்னதாக மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரை இயக்கிய வ.கௌதமன், பின்னர் அரசியல் களத்தில் பிரபலமானார். தீவிர அரசியல், சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு என இருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களை குறித்தும் பேசி வருபவர்.

Popular director son debut Vijay Sethupathi Maamanithan

அவருடைய மகன் தமிழ், தற்போது சினிமாவில் மாமனிதன் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். மாமனிதன் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Also Read | விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான மாமனிதன் படத்தில் மங்காத்தா REFERENCE.. இதான் காரணமா?

தொடர்புடைய இணைப்புகள்

Popular director son debut Vijay Sethupathi Maamanithan

People looking for online information on Baby Manaswi, Maamanithan, Seenu ramasamy, Thamizh, Va Gauthaman, Vijay Sethupathi will find this news story useful.