o2

தனுஷ் உடன் நித்யா மேனன்.. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் செம கலர்ஃபுல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் மேலும் ஒரு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Thiruchitrambalam Movie Dhanush Nithya Menen Colourful Poster

Also Read | மைக் மோகன் படத்தில் யோகிபாபுவின் அசத்தல் கேரக்டர்.. தெறிக்கவிடும் BTS புகைப்படங்கள்.!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.

Thiruchitrambalam Movie Dhanush Nithya Menen Colourful Poster

இப்படத்திற்கு ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் பாடல்  இன்று (24.06.2022) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை இந்த பிரத்யேக போஸ்டர் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Thiruchitrambalam Movie Dhanush Nithya Menen Colourful Poster

அனிருத் ரவிச்சந்திரன் இசையில் நடன இயக்குனர் சதீஷ் நடன இயக்கத்தில் இந்த பாடல் படத்தில் அமைந்துள்ளது. இந்த முதல் சிங்கிள் பாடலுக்கு தாய் கிழவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலை தனுஷ் எழுதி உள்ளார்.

இந்த போஸ்டரில் தனுஷ்,. நித்யா மேனன் உடன் இணைந்து காட்சியளிக்கிறார். சிவப்பு பச்சை நிற புடவையில் நித்யா மேனன் தோன்றியுள்ளார். நீல நிற உடையில் தனுஷ் தோன்றியுள்ளார். கோயில் திருவிழா பின்னணியில் போஸ்டர் அமைந்துள்ளது.

Thiruchitrambalam Movie Dhanush Nithya Menen Colourful Poster

திருச்சிற்றம்பலம் படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read | ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Thiruchitrambalam Movie Dhanush Nithya Menen Colourful Poster

People looking for online information on Dhanush, Nithya Menen, Thiruchitrambalam Movie will find this news story useful.