Pattamboochi

மலையாளப் படத்தில் நித்யா மேனனோடு விஜய் சேதுபதி… கவனம் ஈர்க்கும் வித்தியாசமான first look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் மலையாளப் படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Vijay sethupathi nithya menen new movie first look

விஜய் சேதுபதி…

தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதற்கடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும், பிற நடிகர்களோடு சேர்ந்தும் நடித்து ரசிகர்களைக் கவர்பவர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரவேற்பைப் பெற்றன. அடுத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவான தென்மேற்குப் இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

பிறமொழிகளில் விஜய் சேதுபதி

தமிழில் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த உப்பேன்னா மற்றும் சைரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. அதுபோல இந்தியில் மும்பைக்கார் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களிலும் வெப் சீரிஸுலிம் நடிக்கிறார். இந்நிலையில் அவர் இப்போது மலையாளப் படமான 19 (1) (a) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vijay sethupathi nithya menen new movie first look

கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக்…

இந்த படத்தில் அவரோடு நித்யா மேனான், இந்திரன்ஸ் மற்றும் இந்திரஜித் ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனரான VS இந்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடவே இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி மார்கோனி மத்தாய் என்ற படத்தில் விஜய் சேதுபதியாகவே நடித்திருந்தாலும், முக்கிய வேடத்தில் நடிக்கும் முதல் மலையாளப் படமாக 19 (1) (a) திரைப்படம் அமைந்துள்ளது.

Vijay sethupathi nithya menen new movie first look

People looking for online information on Nithya Menen will find this news story useful.