o2

"விஜய் சேதுபதிக்கு தேசிய விருது நிச்சயம்" மாமனிதன் படம் பார்த்து ஷங்கர் விமர்சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமனிதன் திரைப்படம் நாளை ஜூன் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Vijay Sethupathi maamanithan Movie Review by Shankar

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

Vijay Sethupathi maamanithan Movie Review by Shankar

இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தர்ம துரைக்கு அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளனர். மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் & டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை ‘தர்மதுரை’  தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்று (23.06.2022) மாமனிதன் படத்தின் சிறப்புக்காட்சி பத்திரிக்கையாளர்கள் & சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. இந்த சிறப்புக்காட்சியை இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு மாமனிதன் படம் குறித்து Face Book & டிவிட்டரில் எழுதியுள்ளார்.

Vijay Sethupathi maamanithan Movie Review by Shankar

அதில், மாமனிதன் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியை கொடுத்துள்ளது, இயக்குனர் சீனுராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து இதை ஒரு யதார்த்தமான கிளாசிக் படத்தை கொடுத்துள்ளார். விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக இணைந்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi maamanithan Movie Review by Shankar

People looking for online information on Maamanithan, Seenu ramasamy, Shankar, Vijay Sethupathy will find this news story useful.