IRAVIN NIZHAL
www.garudabazaar.com

நடிகர் சரத்குமாரின் அடுத்த பட அப்டே.! "விஜய் சேதுபதி" வெளியிட்ட first look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் தயாரிப்பில், தீபா சலீல் இணை தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள, சரத்குமார் நடித்த அவரது 150வது திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man).

Vijay Sethupathi releases sarathkumar the smile man

Also Read | BREAKING: அஜித் பட இயக்குனருடன் அடுத்த படத்தில் இணையும் அருண் விஜய்? ஆஹா.. ஷூட்டிங் எப்போ?

சரத்குமாரின் 150வது படம்

தமிழ் சினிமாவில் 100 படங்களைக் கடந்த முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த இரை வெப் சீரிஸ் அண்மையில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.  இந்நிலையில் சரத்குமார், ‘தி ஸ்மைல் மேன்’ என்கிற இந்த படத்தில் நடிக்கிறார்.

cop ஸ்டோரி

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகும்முன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகிவுள்ளது.

நடிகர்கள்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Vijay Sethupathi releases sarathkumar the smile man

தொழில்நுட்பக் குழு விபரம்

8 தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் கூட்டணி இப்படத்தை இயக்குகின்றனர். திரைக்கதை-வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பத்திவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

first look

இந்நிலையில் இந்த படத்தின் first look போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடிகர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘தி ஸ்மைல் மேன்’ என்று தலைப்பிடப்பட்ட போஸ்டரை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Also Read | BREAKING: கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Vijay Sethupathi releases sarathkumar the smile man

People looking for online information on THE SMILE MAN, Vijay Sethupathi sarathkumar will find this news story useful.