#Exclusive : மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்... எப்படி இருந்தார் விஜய்.. என்ன நடந்தது உள்ளே.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெய்வேலியில் நேற்று மாஸ்டர் ஷூட்டிங்கில் முக்கியமான காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

vijay andrea's master shooting spot exclusive details

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இத்திரைபடத்துக்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் படமாக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் வருமான வரித்துறையின் சோதனைக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜய் சென்னைக்கு புறப்பட்டார்.

இந்நிலையில் வருமான வரித்துறையின் சோதனை அனைத்தும் முடிந்து, விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் எந்தவித டென்ஷனும் இன்றி விஜய் மிகவும் கூலாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி இல்லாமல், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோரை கொண்டு, படத்தின் முக்கியமான சேஸிங் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் சம்மருக்கு வருவதாக கூறப்படுகிறது.

Entertainment sub editor