அருண்விஜய்யின் பக்கா வேட்டை..! மாஃபியாவின் மாஸ் ப்ளஸ் க்ளாஸ் பாடல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிப்பில் உருவான மாஃபியா படத்தில் இருந்து பாடல் வெளியாகியுள்ளது.

arunvijay karthick naren's mafia's vedan vandhacho is out

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மாஃபியா. அருண்விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாஃபியா படத்தில் இருந்து வேடன் வந்தாச்சோ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. போதை மருந்து கும்பலை தேடி தேடி அருண்விஜய் வேட்டையாடுவது போல இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டிருக்கும் இப்பாடல், மாஃபியா படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அருண்விஜய்யின் பக்கா வேட்டை..! மாஃபியாவின் மாஸ் ப்ளஸ் க்ளாஸ் பாடல். வீடியோ

Entertainment sub editor