விஜய்யின் மாஸ்டருக்கு முன்னாடியே ரசிகர்களை இந்த தேதியில் சந்திக்கும் விஜய் சேதுபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Vijay Sethupathi, Aishwarya Rajesh's Ka Pae Ranasingam to release in March 28

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான 'க/பெ ரணசிங்கம்' படம் வருகிற மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

க/பெ ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்  தயாரிக்க, விருமாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். 'தர்மதுரை' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Entertainment sub editor