ஆதித்ய வர்மாவில் சியான் விக்ரம் செய்த கேமியோ..! சர்ப்ரைஸ் வீடியோ இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் த்ருவ் ஆதித்ய வர்மாவின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

dhruv vikram shares a video of aditya varma shooting with vikram

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விக்ரம். இவரது மகன் த்ருவ் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கான ஆதித்ய வர்மா படம் த்ருவ்வுக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இத்திரைப்படத்தை கிரிசைய்யா இயக்க, பனிதா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ஆதித்ய வர்மா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். த்ருவ் நடிக்கும் காட்சியில் உதவி இயக்குநர் போல நடிகர் விக்ரம் அருகில் இருந்து டயலாக் சொல்வது போல இருக்கும் அந்த வீடியோவை பதிவிட்டு, என் நினைவுக்குரிய ஷாட் இது என தெரிவித்துளார் த்ருவ். மேலும் த்ருவ்வும் விக்ரமும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My most memorable shot from AV. @the_real_chiyaan 💫

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Entertainment sub editor