விஜய் தேவரக்கொண்டா கொடுத்த கிஃப்ட்டுடன் தன் படத்தின் வெற்றியைக் கொண்டாடிய பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு ரசிகர்களால் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் அல்லு அர்ஜுன். இவரது நடனத்துக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தன் பள்ளிப்பருவத்தை சென்னையில் கழித்தவர். நடிப்பது தெலுங்கில் என்றாலும் தமிழ் பேசும்போது பக்கா சென்னை வாசி. சமீபத்தில் அவர் நடித்த ’அலாவைகுந்தபுரமுலோ’ படம் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்றது.

Allu Arjun in Tirupati with family for Ala Vaikunthapurramloo success and Vijay Devarakonda rowdy gift

இந்நிலையில்  சென்ற மாதம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அல்லு அர்ஜுனுக்கு தன் சொந்த பிராண்டான ரவுடி தயாரித்த துணிகளை அனுப்பி வைத்தார். இதற்கு அல்லு அர்ஜுன் ‘இதை என் படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் பயன்படுத்திக் கொள்வேன் என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு தன் மனைவி, குழந்தைகளுடன் தரிசனத்துக்கு வந்த அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா பரிசளித்த உடைகளை அணிந்திருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னிலை வகிக்கும் இரண்டு நடிகர்கள் போட்டிப் பொறாமைக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் நட்புடன் பழகுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Entertainment sub editor