விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு... நெய்வேலியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

bjp members protest in neyveli to stop vijay's master shooting

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாஸ்டர் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து சரவண பெருமாள் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பாதுகாப்பாக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எவ்வாறு விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது என்றும், காலம் காலமாக நாங்கள் வழிபட்ட துர்க்கை அம்மன் கோயில் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தின் உள்ளே இருக்கும் நிலையில் எங்களை அனுமதிக்காதது ஏன் என்றும் முழக்கங்கள் எழுப்பி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  

Entertainment sub editor