விஜய் நண்பர் எமோஷனல் - நம்மள தடுக்க ஒரு கூட்டமே வரும்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஶ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்காக எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

actor sriman posts emotional message for vijay post id raids

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஶ்ரீமன். பஞ்ச தந்திரம், ஆயுத எழுத்து, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஶ்ரீமன், விஜய்யின் லவ் டுடே, ஃப்ரெண்ட்ஸ், போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஶ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் குறித்து எமோஷனலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த தனது பதிவில், 'சிறு வயதில் இருந்தே நீ உழைத்து வருகிறாய். பல மேடு பள்ளங்களை நீ பார்த்திருக்கிறாய்,  அனுபவத்தின் மூலமே நீ வாழ்க்கையை கற்றுகொண்டாய், தொழில் மீது அக்கறையும், கூட்டத்தில் இருந்து தனித்து தெரிய நீ எவ்வளவோ செய்திருக்கிறாய், உன் நண்பர்கள் மீதும் ரசிகர்கள் மீதும் அளவுகடந்த காதல் வைத்திருக்கிறாய், மேலும் அனைவரிடமும், உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது என ஊக்கப்படுத்தி இருக்கிறாய். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார், லவ் யூ விஜய்' என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் பிகில் ஆடியோ லான்சில், 'நாம கோல் போட ட்ரை பண்ணுவோம், அதை தடுக்க ஒரு கூட்டமே வரும்' என விஜய் பேசிய வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.  

வருமான வரித்துறை சோதனை முடிந்த நேரத்தில் ஶ்ரீமன் இப்படி பதிவிட்டிருப்பது விஜய் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor