தர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரம் - தர்ஷன் குறித்து பிக்பாஸ் வீடியோ மூலம் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் தர்ஷனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் ஆனால் பிக்பாஸ் சென்று வந்த பிறகு தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். தர்ஷன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
![Vanitha Vijayakumar shares Bigg Boss Video about Tharshan Sanam Shetty Issue Vanitha Vijayakumar shares Bigg Boss Video about Tharshan Sanam Shetty Issue](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vanitha-vijayakumar-shares-bigg-boss-video-about-tharshan-sanam-shetty-issue-photos-pictures-stills.jpg)
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்ததாகவும் அதற்கான ஆதாரம் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தன் பங்குக்கு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த இரண்டு சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், தர்ஷன் மற்றும் குறித்து தன் கருத்தை விளக்கும் விதமாக பிக்பாஸில் கமல்ஹாசனிடம் தர்ஷன் - ஷெரின் பிரச்சனையின் போது தான் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Tags : Bigg boss, Tharshan, Sanam Shetty, Vanitha