ஐபிஎல் மேட்ச் பார்க்கவிடாமல் ரசிகருக்கு தொல்லை: பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐபிஎல் போட்டியின் போது மேட்ச் பார்க்கவிடாமல் ரசிகருக்கு தொல்லை கொடுத்த பிரபல தெலுங்கு டிவி நடிகை உட்பட 5 பேர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Case Against TV Actress Prashanthi For Allegedly obstructing Man From Watching IPL Match

தெலுங்கானாவில் உள்ள உப்பல் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது விளையாட்டை காண மைதானத்திற்கு சென்றிருந்த டிவி நடிகை பிரஷாந்தி மற்றும் அவருடன் சென்றிருந்த 5 பேர் துள்ளி குதித்து சத்தம் போட்டு ரசிகர் ஒருவருக்கு இடையூறு செய்துள்ளனர்.

இதனை அந்த ரசிகர் கண்டித்தபோது, அவரை மிரட்டியதுடன் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த ரசிகர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததன் பேரில், நடிகை உட்பட 6 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.