Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது" பட டிரெய்லர்.. வெங்கட் பிரபு போட்ட வைரல் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின்  டிரெய்லர் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

Venkat Prabhu about Pa Ranjith Natchathiram Nagargirathu Trailer

Also Read | "தனுஷ் நடித்த சிறந்த படங்களில் ஒன்று 'திருச்சிற்றம்பலம்'.." பிரபல தமிழ் இயக்குனரின் கருத்து!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில்  நடத்தது, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டு நிறைவுச்செய்தது.

Venkat Prabhu about Pa Ranjith Natchathiram Nagargirathu Trailer

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  

Venkat Prabhu about Pa Ranjith Natchathiram Nagargirathu Trailer

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

டிரெய்லர் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் மற்றும் படத்தின் டிரெய்லரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில்," வேற லெவல்! செம! திரையரங்குகளில் நட்சத்திரம் நகர்கிறது மாயாஜாலத்தை காண ஆவலாக உள்ளேன் ரஞ்சித்" என கூறியுள்ளார்.

Venkat Prabhu about Pa Ranjith Natchathiram Nagargirathu Trailer

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. வெளியான கலர்ஃபுல் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu about Pa Ranjith Natchathiram Nagargirathu Trailer

People looking for online information on Natchathiram Nagargirathu, Pa Ranjith, Venkat Prabhu will find this news story useful.