Kaateri logo top
www.garudabazaar.com

பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் அப்டேட்! ஆஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Release Date Announced

Also Read | 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது.

இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம்  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Release Date Announced

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுச்செய்துள்ளது. இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Release Date Announced

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  சர்ரியலிசம் பாணியில் இந்த போஸ்டர் அமைந்தது இருந்தது. இந்த படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பிரத்யேக போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Release Date Announced

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. கார்த்தி தோன்றும் தெறியான BTS வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Release Date Announced

People looking for online information on Natchathiram Nagargirathu Movie, Pa Ranjith will find this news story useful.