www.garudabazaar.com

'மெட்ராஸ்' ஹரி, 'டூலெட்' ஷீலா நடிக்கும் புதிய படம் - துவங்கி வைத்த பா.ரஞ்சித்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார்.

Madras Hari Tolet Sheela new movie Pa Ranjith launched

Also Read | பொன்னியின் செல்வன் போர்க் காட்சிகள்.. இந்த ஊர்ல தான் எடுத்தாங்களாம்! மணிரத்னம் சொன்ன தகவல்!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். 

Madras Hari Tolet Sheela new movie Pa Ranjith launched

கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். A.குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சிவசங்கர் வசனம் எழுதுகிறார். ஸ்டில் கேமரா மேனாக M.குமரேசன் பணிபுரிய, புரொடக்‌ஷன் மேனேஜராக  T.ராஜன், மக்கள் தொடர்பாளராக A. ஜான் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் ஜூலை-6 (இன்று) நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார்.

Madras Hari Tolet Sheela new movie Pa Ranjith launched

நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Also Read | முதல் தடவை 7 வயது பையனுக்கு அப்பாவாக விஷால் & அம்மாவாக சுனைனா.. BTS புகைப்படங்கள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Madras Hari Tolet Sheela new movie Pa Ranjith launched

People looking for online information on Golden Suresh, HariKrishnan, Justin Prabhu, Manjal Cinemas, Pa Ranjith, Sheela Rajkumar will find this news story useful.