Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"தனுஷ் நடித்த சிறந்த படங்களில் ஒன்று 'திருச்சிற்றம்பலம்'.." பிரபல தமிழ் இயக்குனரின் கருத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த பின் இயக்குனர் பாலாஜி மோகன் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Dhanush Thiruchitrambalam Movie Review from Balaji Mohan

Also Read | "நடுராத்திரி சம்மர்சால்ட் அடிக்கவிட்டியே மன்னிக்கவேமாட்டேன்"-BIGGBOSS பிரபலம் பற்றி கார்த்தி!

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் நேற்று (ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல்) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சில பகுதிகளில் காலை 10:30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

Dhanush Thiruchitrambalam Movie Review from Balaji Mohan

இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie Review from Balaji Mohan

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

Dhanush Thiruchitrambalam Movie Review from Balaji Mohan

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர்  பாலாஜி மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று  ரசிகர்களுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படம் பார்த்தேன். அருமையான எழுத்து & நடிப்பு. அத்தகைய ஒரு பொழுதுபோக்கு, நன்றாக உணர வைக்கும் திரைப்படம்.தனுஷ் சாரின் வாழ்க்கையில் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கும். பிளாக்பஸ்டர் நிச்சயம்!தமிழிலும் தெலுங்கிலும்!" என‌ பாலாஜி மோகன் டிவிட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷ் நடிப்பில் மாரி & மாரி-2 படங்களை இயக்கியவர் ஆவார்.

Also Read | கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறி தனது 4 மாத குழந்தையின் CUTE போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Review from Balaji Mohan

People looking for online information on Balaji Mohan, Dhanush, Dhanush Thiruchitrambalam Movie Review, Thiruchitrambalam will find this news story useful.