Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

பா.ரஞ்சித்-தின் 'நட்சத்திரம் நகர்கிறது'.. டிரெய்லர் எப்போ? போஸ்டருடன் வெளியான அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நட்சத்திரம் நகர்கிறது படத்தின்  டிரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Trailer Release Update

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போ? எங்க?

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது.

இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Trailer Release Update

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுச்செய்தது.

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Trailer Release Update

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என பா.ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Trailer Release Update

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | மகேஷ் பாபு - பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Trailer Release Update

People looking for online information on Natchathiram Nagargirathu Movie, Natchathiram Nagargirathu Movie Trailer, Pa Ranjith will find this news story useful.