IRAVIN NIZHAL
www.garudabazaar.com

பா. ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படம்.. வெளியான கதாபாத்திரங்களின் 'அசத்தல்' Intro வீடியோ!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து, 'அட்டகத்தி' என்னும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித்.

pa ranjith natchathiram nagargirathu character intro video

இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படமும் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் பா. ரஞ்சித் பக்கம் இழுத்திருந்தது.

இதன் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து, அடுத்தடுத்து 'கபாலி', 'காலா' உள்ளிட்ட திரைப்படங்களையும் பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.

அடுத்தடுத்து சிறந்த படைப்புகள்

இதனையடுத்து, ஆர்யாவை வைத்து 1990-களில் நடைபெறும் குத்துச் சண்டை போட்டியை மையமாக வைத்து 'சார்பட்டா பரம்பரை' எனும் திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார். ஓடிடி தலமான அமேசான் பிரைமில் வெளியான இந்த திரைப்படம், அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் உருவாகி இருந்தது.

இதற்கு மத்தியில், நீளம் புரொடக்ஷன்ஸ் என்னும் பெயரில், தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பா. ரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் உள்ளிட்ட பல படங்களையும் தயாரித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் தான், "நட்சத்திரம் நகர்கிறது". ஒரு காதல் டிராமா திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

நட்சத்திரம் நகர்கிறது..

தென்மா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு, பாண்டிச்சேரி, சென்னை, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்தில், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. சர்ரியலிசம் பாணியில் பாடிய இந்த போஸ்டர் அமைந்திருந்த நிலையில், தற்போது அசத்தலான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

வரவேற்பை பெற்ற வீடியோ

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் வரும் கதாபாத்திரங்களை இந்த வீடியோ மூலம் அறிமுகம் செய்துள்ளது படக்குழு. அதே போல, இது தொடர்பான வீடியோவை தன்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பா. ரஞ்சித், "Love is Political!" என குறிப்பிட்டு, நட்சத்திரம் நகர்கிறது படத்தின் நட்சத்திரங்களை அறிமுகம் செய்வது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

சற்று வித்தியாசமாக இருந்த நட்சத்திரம் நகர்கிறது பர்ஸ்ட் லுக், மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோவும் சற்று வித்தியாசமாக இருப்பதால், பெரும்பாலானோரை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

pa ranjith natchathiram nagargirathu character intro video

People looking for online information on Dushara, Kalidas Jayaram, Natchathiram Nagargirathu, Pa Ranjith will find this news story useful.