”பொன்னியின் செல்வன் பாக்குறன்னு சொல்லிருக்கேன்…” உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Udhayanidhi stalin talked about ponniyin selvan in Don event

Also Read | ”நான் பார்த்ததிலேயே வெறித்தனமான….” RRR படத்தைப் பற்றி ஹாலிவுட் எழுத்தாளரின் viral Tweet

பொன்னியின் செல்வன்

கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் இயக்கி வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.  இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Udhayanidhi stalin talked about ponniyin selvan in Don event

கதைக்களம்…

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே. இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத்  திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.

Udhayanidhi stalin talked about ponniyin selvan in Don event

நட்சத்திரப் பட்டாளம்…

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரதகுமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரம்மாண்டமாக அரங்கங்களை தோட்டா தரணி அமைக்க, கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனின் திரை வடிவத்துக்கு ஜெயமோகன் வசனங்களை எழுதுகிறார். பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் எழுத பாடல்களுக்கான நடனத்தை பிருந்தா வடிவமைத்துள்ளார்.

Udhayanidhi stalin talked about ponniyin selvan in Don event

உதயநிதி ஸ்டாலின் ரிலீஸா?

இந்த படத்தின் சில போஸ்டர்களைத் தவிர வேறு அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட ‘டான்’ படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது பொன்னியின் செல்வன் பற்றி பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “லைகா தமிழ்க்குமரன் என்னிடம் பொன்னியின் செல்வன் தயாராகி விட்டது. எப்போது பார்க்கிறீர்கள் எனக் கேட்டார். நான் சீக்கிரம் பார்ப்பதாக சொல்லி இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.

வரிசையாக பிரபல நடிகர்கள், இயக்குனர்களின் படங்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ பார்க்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் இந்த படத்தையும் அவரது நிறுவனமே ரிலீஸ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read | முதல் முறையாக திரையில் அண்ணாமலை…. கவனம் ஈர்த்த ‘அரபி’ பட டீசர்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin talked about ponniyin selvan in Don event

People looking for online information on Don event, Ponniyin Selvan, Udhayanidhi Stalin will find this news story useful.