”நான் பார்த்ததிலேயே வெறித்தனமான….” RRR படத்தைப் பற்றி ஹாலிவுட் எழுத்தாளரின் viral Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் ராபர்ட் கார்கிள் RRR திரைப்படத்தை பாராட்டிய டிவீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Doctor strage movie co writer viral tweet about RRR

Also Read | “அதிர வைத்த சூர்யா.. அதற்கான நன்றி அடுத்த படத்தில்”… 5 மொழிகளில் பேசிய கமல்… வைரல் வீடியோ

RRR

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.

Doctor strage movie co writer viral tweet about RRR

வசூல்…

ரிலீஸூக்குப் பின்னர் RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய அளவில் அதிக வசூல் செய்யப்பட்ட படங்களில் ஒன்றாக RRR இடம்பிடித்தது.

ஓடிடியில்…

RRR திரைப்படத்தின் திரையரங்க வெற்றியை அடுத்து  ஓடிடி வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். வெளியாகி 50 நாட்கள் கழித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனின் ஓடிடி பிரிமீயர் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆனது. அதே நாளில் இந்தி வெர்ஷன் உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸில் வெளியானது. கிட்டத்தட்ட 57 நாடுகளில் RRR திரைப்படம் டிரண்ட்டிங்கில் இருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்திருந்தது.

Doctor strage movie co writer viral tweet about RRR

ஹாலிவுட் எழுத்தாளரின் பாராட்டு…

ஓடிடியில் வெளியான பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் Doctor strange உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய திரைக்கதை எழுத்தாளர் ராபர்ட் கார்கில் ‘RRR’ திரைப்படம் பற்றி பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவரது டிவீட்டில் “நண்பர்கள் என்னை RRR எனும் cult படத்தை பார்க்க வலியுறுத்தினர். நான் இப்போது முழுமையாக அந்த படத்தைக் கொண்டாடும் உறுப்பினர்களில் ஒருவனாக வந்துள்ளேன். நான் பார்த்தவற்றில் மிகவும் வெறித்தனமான, மிகவும் நேர்மையான, வித்தியாசமான பிளாக்பஸ்டர் திரைப்படம். ஜெஸ்ஸும் நானும் இந்த வாரம் அதை மீண்டும் பார்ப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

Also Read | முதல் முறையாக திரையில் அண்ணாமலை…. கவனம் ஈர்த்த ‘அரபி’ பட டீசர்

தொடர்புடைய இணைப்புகள்

Doctor strage movie co writer viral tweet about RRR

People looking for online information on Doctor strage movie, Doctor strage movie co writer, RRR will find this news story useful.