"கைதி போலவே விக்ரமும் BLOCKBUSTER".. ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷூடன் பிரபல இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Lokesh Kanagaraj and Ratna Kumar at rameshwaram temple visit

Also Read | நயன்தாராவுடன் திருமணம் எப்போ? எங்க? அதிகாரபூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj and Ratna Kumar at rameshwaram temple visit

நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj and Ratna Kumar at rameshwaram temple visit

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

Lokesh Kanagaraj and Ratna Kumar at rameshwaram temple visit

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது படக்குழுவினர் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே வெளிவந்தது.

தற்போது இயக்குனர் & வசனகர்த்தா ரத்ன குமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Lokesh Kanagaraj and Ratna Kumar at rameshwaram temple visit

இந்த போட்டோவுடன் கைதி படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் ராமேஸ்வரம் சென்ற புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்து 'Blockbuster சம்பவம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | பிரபல STAR போட்டோகிராபருடன் இணைந்த நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த LATEST போட்டோஷூட் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj and Ratna Kumar at rameshwaram temple visit

People looking for online information on Lokesh Kanagaraj, Rameshwaram temple, Ratna Kumar will find this news story useful.