“டான் கதை முதலில் என்னிடம் வந்தது… வேண்டாம்னு…” சீக்ரெட்டை சொன்ன பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான் படத்தின் 25 ஆவது நாள் வெற்றிக்கொண்டாட்டம் சென்னையில் நடந்த நிலையில் படக்குழுவை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Don story went Udhayanidhi stalin secret revealed

டான் ரிலீஸ்…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

Don story went Udhayanidhi stalin secret revealed

100 கோடி வசூல்…

‘டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  இப்போதும் சில திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Don story went Udhayanidhi stalin secret revealed

25 ஆவது நாள்…

இந்நிலையில் நேற்று டான் திரைப்படத்தின் 25 ஆவது நாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் வழங்கும் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக லைகா சுபாஷ்கரன் இலண்டனில் இருந்து சென்னைக்கு வந்திர்ந்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதில் “டான் கதை முதலில் என்னிடம்தான் வந்தது. நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். கதை எனக்குப் பிடித்தது. ஆனால் கதையில் வரும் ஸ்கூல் பையன் வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. அதனால்தான் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல வேலை அது சிவாவிடம் சென்றுள்ளது. யார் யார் எத பண்ணனுமோ அது அமைஞ்சிருக்கு. சிபி என்கிட்ட இருந்து நீங்க எஸ்கேப் ஆகி இருக்கீங்க. ” என்று கலகலப்பாக பேசினார்.

Don story went Udhayanidhi stalin secret revealed

தொடர்புடைய இணைப்புகள்

Don story went Udhayanidhi stalin secret revealed

People looking for online information on Lyca, Sivakarthikeyan, Udhayanidhi Stalin will find this news story useful.