ஆர்யா நடிக்கும் PAN INDIA படம்.. உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்! ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

Arya Starring Captain Movie Rights Bagged by Udhayanidhi Stalin

Also Read | 8 வயது பையனுக்கு அம்மாவாக நயன்தாரா.. பேருந்தினுள் உச்சக்கட்ட போராட்டம்! வெளியான டீசர் VIDEO

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது  நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.  “டெடி” என்ற படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arya Starring Captain Movie Rights Bagged by Udhayanidhi Stalin

“கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

Arya Starring Captain Movie Rights Bagged by Udhayanidhi Stalin

“கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

Arya Starring Captain Movie Rights Bagged by Udhayanidhi Stalin

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளனர். செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arya Starring Captain Movie Rights Bagged by Udhayanidhi Stalin

People looking for online information on Arya, Captain Movie, Udhayanidhi Stalin will find this news story useful.