மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷின் கலக்கல் நடனம்.. FANS விருப்பத்திற்கு ஏற்ப ரிலீசான வீடியோ பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய படத்தின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

Keerthy suresh mahesh babu Murari vaa video song released

Also Read | "கைதி போலவே விக்ரமும் BLOCKBUSTER".. ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷூடன் பிரபல இயக்குநர்!

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படம் (12.05.2022) அன்று முதல் தியேட்டரில் வெளியாகியுள்ளது.

'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கினார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

Keerthy suresh mahesh babu Murari vaa video song released

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குனராகவும் பணிபுரிந்தனர்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 'சர்க்காரு வாரி பாட்டா', படத்தின் மையக் கதை பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக  ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

Keerthy suresh mahesh babu Murari vaa video song released

இந்நிலையில் இப்படத்தின் முராரி வா பாடல் வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. படத்தின் ஆரம்ப ரிலீஸில் இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை. பின்னர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்த பாடல் படத்தில் இடம்பெற்றிருந்தது. இச்சூழலில் இந்த வீடியோ பாடல் ரிலீசாகி உள்ளது. மேலும் இந்த பாடலில் கீர்த்தி சுரேஷ் & மகேஷ் பாபு ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன.

இப்பாடலை அனந்த ஶ்ரீ ராம் எழுத, தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை ஸ்ருதி ரஞ்சனி, காயத்ரி, ஶ்ரீ கிருஷ்ணா ஆகியோர் பாடியுள்ளனர்.

Keerthy suresh mahesh babu Murari vaa video song released

இப்படம் உலகளவில் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மகேஷ் பாபுவுக்கு இது தொடர்ந்து நான்காவது 100 கோடி+ ஷேர் கொடுத்த திரைப்படம் ஆகும்.

Also Read | விக்ரம் படத்தின் அசத்தல் வெற்றி.. லோகேஷுக்கு உலகின் விலையுயர்ந்த காரை பரிசளித்த கமல்!

மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷின் கலக்கல் நடனம்.. FANS விருப்பத்திற்கு ஏற்ப ரிலீசான வீடியோ பாடல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh mahesh babu Murari vaa video song released

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu, Murari vaa video song will find this news story useful.