‘விக்ரம்’ வெற்றிக் கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்… டபுள் ட்ரீட்டாக வந்த ‘இந்தியன் 2’ Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் வெளியான நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Udhayanidhi stalin speech about Indian 2 resume

விக்ரம்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றன.. இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Udhayanidhi stalin speech about Indian 2 resume

கமல் fans ஹேப்பி…

வெளியானது முதல் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது விக்ரம். குறிப்பாக நடிகர்கள் கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதுபோலவே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இவர்கள் தவிர படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களும் திரையரங்கில் ரசிகர்களிம் கைதட்டலைப் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Udhayanidhi stalin speech about Indian 2 resume

இந்தியன் 2 அப்டேட்…

இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிப்புச் செய்தியாக கிடப்பில் இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்குவது சம்மந்தமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. டான் படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழாவில் கலந்துகொண்ட விநியோகஸ்தரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே விக்ரம் வெளியீட்டுக்கு முன்பாக நடிகர் கமல்ஹாசன் “இந்தியன் 2 விரைவில் தொடங்கும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” எனக் கூறியிருந்தார்.

Udhayanidhi stalin speech about Indian 2 resume

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin speech about Indian 2 resume

People looking for online information on Indian 2, Kamal, Udhayanidhi Stalin, Vikram will find this news story useful.