முதல் முறையாக திரையில் அண்ணாமலை…. கவனம் ஈர்த்த ‘அரபி’ பட டீசர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘அரபி’ என்ற திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Annamalai on screen sebut arabbie movie teaser

Also Read | “மாஸ் & க்ளாஸ்… அன்லிமிடெட் அசைவ விருந்து....” விக்ரம் படம் பற்றி பிரபல இயக்குனரின் Tweet

அண்ணாமலை…

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை அந்த வேலையை விட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார். தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த குறுகிய காலத்திலேயே அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

Annamalai on screen sebut arabbie movie teaser

திரைப்பட அறிமுகம்…

இந்நிலையில் அண்ணாமலை முதல்முறையாக திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள அந்த திரைப்படம் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஒருவரைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நீச்சல் வீரருக்குப் பயிற்சியாளராக சிறப்புத் தோற்றத்தில் அண்ணாமலை நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பற்றி சமீபத்தில் அண்ணாமலை “படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

Annamalai on screen sebut arabbie movie teaser

கவனம் ஈர்த்த டீசர்…

இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பே வெளியாவதாக இருந்த நிலையில் தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமானது. அதையடுத்து தற்போது அரபி படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி நீச்சல் வீரரான விஸ்வாஸுக்கு ஒரு காட்சியில் பயிற்சி அளிப்பவராக அண்ணாமலை தோன்றியுள்ளார். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கி உள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Annamalai on screen sebut arabbie movie teaser

Also Read | “அதிர வைத்த சூர்யா.. அதற்கான நன்றி அடுத்த படத்தில்”… 5 மொழிகளில் பேசிய கமல்… வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Annamalai on screen sebut arabbie movie teaser

People looking for online information on Annamalai, Arabbie movie, Arabbie movie teaser, TamilNadu BJP Leader Annamalai on screen will find this news story useful.